தேசிய செய்திகள்

உணவு உற்பத்தி சாதனை: 2016-17 ஆம் ஆண்டில் 273.38 மில்லியன் டன்களாக அதிகரித்தது

கடந்த 2016 ஆம் ஆண்டில் மழை நன்கு பெய்ததால் உணவு தானிய உற்பத்தி 273.38 மில்லியன் டன்களாக உயர்ந்தது.

புதுடெல்லி

மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சாதனை முந்தைய சாதனையான 2013-14 ஆம் ஆண்டின் 265.04 மில்லியன் டன்களை விட 8.34 மில்லியன் டன்கள் அதிகம். முந்தைய 2015-16 ஆம் ஆண்டை விட 21.81 மில்லியன் டன்கள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அரிசியின் மொத்த உற்பத்தி 109.15 மில்லியன் டன்களாகவும் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டை விட 4.74 மில்லியன் டன்கள் அதிகம்.

கோதுமையும் இதே போன்று 97.44 மில்லியன் டன்கள் அதிகம். 2015-16 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.15 மில்லியன் டன்கள் அதிகம் என்று மதிப்பீடு கூறுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...