கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது 20 பேர் பலி

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பல்வேறு நிகழ்வுகளில் 20 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த நிலையில், மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதில், 14 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஊர்வலத்தின் போது சாலை விபத்தில் 4 பேரும், மரம் விழுந்து பெண் ஒருவர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்து உள்ளதாக மராட்டிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது