கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய சட்டம்: மத்திய மந்திரி கிஷண் ரெட்டி தகவல்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மந்திரி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சண்டிகார்,

அரியானாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுடன் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி நேற்று கிஷண் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே இதில் இருந்து மீட்டெடுப்பதற்காக புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் எனக்கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுற்றுலாத்துறைக்கு புதிய திசையை வழங்கும் முதல் மசோதா இது எனக்கூறிய ரெட்டி, இதன்மூலம், நாடு முழுவதும் சுற்றுலாத் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நம்பிக்கையும் தெரிவித்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்