தேசிய செய்திகள்

காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் பலி - குதிரை சவாரியின்போது மரம் விழுந்து நசுக்கியது

காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் குதிரை சவாரியின்போது மரம் விழுந்து நசுக்கியதில் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகே ஒரு மலைப்பாங்கான சுற்றுலா விடுதியில் சுற்றுலா பயணிகள் பலர் தங்கியிருந்தனர். தமிழகத்தை சேர்ந்த ஜனார்த்தனம் (வயது 67) என்பவரும் அந்த விடுதியில் தங்கி பொழுதுபோக்கினார்.

நேற்று அவர் விடுதியில் குதிரை சவாரி சென்றபோது, பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அது குதிரையில் பயணம் செய்த ஜனார்த்தனம் மீது விழுந்து அமுக்கியது. இதில் குதிரையுடன், சேர்த்து ஜனார்த்தனமும் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு