தேசிய செய்திகள்

புத்தாண்டு முடிந்து திரும்பிய சுற்றுலா பயணிகள் - புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்திருந்த மக்கள், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் புதிய பேருந்து நிலையத்தில் திரண்டனர். பேருந்துகளில் இருக்கைகளை பிடிக்க முண்டியடித்து சென்றதால், பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

இதனால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்