தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-லாரி மோதல்; பக்தர்கள் 4 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சீத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகுலபாரா கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாரபங்கியில் அமைந்திருக்கும் மாஜிதா நாக தேவதா கோவிலுக்கு டிராக்டர் டிரெய்லரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

அப்போது டிராக்டரும், ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில், டிராக்டர் டிரெய்லரில் பயணித்த பக்தர்கள் 4 பேர் இறந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்