புதுடெல்லி,
தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் 2-வது நாளையொட்டி நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் புதுச்சேரி வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடுக்க வேண்டும், இணையவழி வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். புதுச்சேரி வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் வி.சத்தியநாராயணன், எஸ்.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.