ஜெய்பூர்,
ஜி.எஸ்.டி.க்கு எதிராக ராஜஸ்தானை சேர்ந்த பல வணிக அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.பல வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கு பெற்றனர்.
வணிக சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அருண் அகர்வால் பேசுகையில் ஜி.எஸ்.டி.யில் உள்ள சிக்கலான செயல்முறைகளையும், அதிக வரி விதிப்பையும் எதிர்த்து இந்த போராட்டம் நடத்தபடுவதாக கூறினார்.
போராட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் ஜெய்பூர், உதய்பூர், ஆழ்வார், சிகார், ஜோத்பூர், கோட்டா மற்றும் சில மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.