மும்பை,
மும்பை அருகே எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியதில் 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் 49 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்து நாடு முழுவதும் சோக அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கப்பல் விபத்தில் உயிரிழப்பு தொடர்பாக மும்பை எல்லோ கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
டவ்தே புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் பல முறை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அந்த கப்பல் அங்கேயே நின்றது ஏன் என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் மற்றும் இதர ஏஜென்சிகளிடம் கருத்து கேட்டு விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.