தேசிய செய்திகள்

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்தனர்.

மேலும் பல நோயாளிகளின் உடல்நிலை மோசம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்