யாத்கிர்,
கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதி தங்களுடைய 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதபற்றிய தகவல் அறிந்ததும் யாத்கிர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் குளத்தில் இருந்து 6 உடல்களையும் வெளியே எடுத்துள்ளனர்.
நிலத்தின் சிறு பகுதியில் பூந்தோட்டம் அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் வருத்தமடைந்திருந்த அந்த தம்பதி இந்த சோக முடிவை எடுத்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.