ஸ்ரீநகர்,
பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் 5-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரிவினைவாத அமைப்புகள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. எனெவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டு மட்டும், பாதுகாப்பு காரணங்களுக்காக 11-வது முறை ரயில் போக்குவரத்து இதுவரை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட முறை பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு 2013 ஆண்டு ஆம் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் டெல்லி திகார் சிறை வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூறத்தக்கது.