தேசிய செய்திகள்

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு; ரெயில் சேவைகள் இன்று ரத்து

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் ரெயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் சுதந்திர முன்னணி என்ற அமைப்பின் நிறுவனர் முகமது மக்பூல் பட். டெல்லி திகார் சிறைச்சாலையில் கடந்த 1984ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு பின்னர் சிறைக்குள்ளேயே பட் புதைக்கப்பட்டார்.

அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பொது வேலை நிறுத்தத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளன.

இதனை தொடர்ந்து போலீசார் வெளியிட்ட புதிய அறிவிப்பினால், அந்த பகுதியில் ரெயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பத்காம் முதல் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் செல்லும் ரெயில்கள், தெற்கு காஷ்மீரில் காஜிகண்ட் முதல் ஜம்மு பகுதியில் பனிஹால் வரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வடகாஷ்மீரில் ஸ்ரீநகர் முதல் பத்காம் மற்றும் பாராமுல்லா நோக்கி செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த வருடம் ரெயில் சேவை ஒரு பகுதியாக அல்லது முழுவதும் ரத்து செய்யப்படுவது இது 12வது முறை. இதனால் பயணிகள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது