தேசிய செய்திகள்

மராட்டியத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்; ரூ.279 கோடி இழப்பு

மராட்டியத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ரூ.279 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ந்தேதி முதல் நவம்பர் 19ந்தேதி வரை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பண்டிகை காலத்தில் நடந்த இந்த ஸ்டிரைக்கால் மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், மராட்டியத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் ரூ.279 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.