கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இடைத்தேர்தல்: மே.வங்கத்தில் திரிணாமுல் வெற்றி: சட்டிஸ்கர், மராட்டியத்தில் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது.

இதுபோலவே பிகாரில் ஆர்ஜேடி வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பீகாரில் உள்ள போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் கைராகர் மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்