தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி தினேஷ் திரிவேதி ராஜினாமா

திரிணாமூல் காங்.கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள்.

பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு பலர் தாவுவது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநிலங்களவையில் அறிவித்தார்.

மாநிலத்தில் நடக்கும் வன்முறை நடப்பதாகவும் தன்னால் அவையில் எதுவும் பேச முடியவில்லை எனவும் தினேஷ் திரிவேதி கூறினார்.மேலும், மாநில மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன் எனவும் தினேஷ் திரிவேதி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்