தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ஜன.2 ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஜனவரி 2-ம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணை விவகாரத்தை முன் வைத்து அதிமுக, திமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியதும், தொடர் அமளி நீடித்தது.

முத்தலாக் மசோதாவை தற்போதைய நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், இன்று முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மாநிலங்களவையும் ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?