தேசிய செய்திகள்

சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களே சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்ய வேண்டும்: திரிபுரா முதல்வர் சொல்கிறார்

சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களே சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்ய வேண்டும் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்து உள்ளார். #TripuraCM

தினத்தந்தி

அகர்தலா,

மெக்கானிக் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடாது எனவும், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களே சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்ய வேண்டும் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிப்லாப்குமார் தேப் கூறியதாவது:- முன்பு, ஆர்ட்ஸ் மாணவர்கள் குடிமைப்பணியாளர்கள் பணியை தேர்வு செய்தனர். பின்பு, மருத்துவர்கள், பொறியாளர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்ய துவங்கிவிட்டனர். இருந்தாலும், மெக்கானிக்கல் இன் ஜினியர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது. அதேவேளையில், சிவில் என்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் பணியை தேர்வுசெய்ய வேண்டும், சிவில் சர்வீஸ் பணியை பொறுத்தவரை, சமூகத்தை கட்டமைக்க நிர்வாகத்திறன் அவசியம், சிவில் இன்ஜினியர்களுக்கு அந்த திறன் உள்ளது என்றார்.

திரிபுரா முதல்வர் இவ்வாறு பேசுவது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது புதிதல்ல. அண்மையில், மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் ஆகியவை இருந்தது என கூறி விமர்சனத்துக்குள்ளானர் என்பது கவனிக்கத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்