தேசிய செய்திகள்

ஆட்டோ மீது லாரி மோதல்; 4 பேர் சாவு

சிந்தாமணி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கோலார் தங்கவயல்:-

ஆட்டோ-லாரி மோதல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மஞ்சேவாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (42), மஞ்சுநாத் (28). நேற்று முன்தினம் வெங்கடேஷ் மற்றும் சந்திரசேகர், மஞ்சுநாத் ஆட்டோவில் ஆந்திரா மாநிலம் புங்கனூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை மற்றொரு மஞ்சுநாத் (48) என்பவர் ஓட்டி சென்றார். சிந்தாமணி புறநகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட செங்கம்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, எதிரே தறிகெட்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் பயணம் செய்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது.

4 பேர் சாவு

மேலும் இடிபாடுகளில் சிக்கி வெங்கடேஷ், சந்திரசேகர், மஞ்சுநாத் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து சிந்தாமணி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சன்ற போலீசார் 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் டிரைவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்