புதுடெல்லி,
மோடியுடன் டிரம்ப் பேச்சு
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் உலக நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசியில் பேசி வருகிறார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியு, மெக்சிகோ பிரதமர் பெனா நீட்டோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகிய 4 தலைவர்களுடன் பேசிய நிலையில், நேற்றுமுன்தினம் இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்அவர் தொலைபேசியில் பேசினார். இதன்மூலம் டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் பேசிய 5-வது தலைவர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
உண்மையான நண்பர்
இந்த உரையாடலின்போது, இந்தியா, அமெரிக்கா வின் உண்மையான நண் பராகவும், உலகைச் சூழ்ந்துள்ள சவால்களை சந்திப்பதில் கூட்டாளியாகவும் திகழ்கிறது என புகழாரம் சூட்டினார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பிராந்திய பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மோடிக்கு அழைப்பு
இந்த ஆண்டில் பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்த தகவல்களை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
டிரம்புடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக பிரதமர் மோடி, டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஜனாதிபதி டிரம்புடனான உரையாடல் இனிமையாக அமைந்தது. நமது உறவை வலுப்படுத்துவதற்கு இனிவரும் நாட் களில் நெருங்கி பணியாற்ற நான் ஒப்புக் கொண் டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வருமாறு டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதில் மோடி தெரிவித்துள்ளார்.