தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் எங்களுக்கு பின்னடைவு இல்லை’ - பாரதீய ஜனதா கருத்து

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த உத்தரவால் எங்களுக்கு பின்னடைவு இல்லை என பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை யில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நலின் கோஹ்லியிடம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, பாரதீய ஜனதா கட்சிக்கு பின்னடைவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், அரசியல் சாசனம் சார்ந்த எந்தவொரு பிரச்சினையிலும் நீதித்துறை அறிவிப்பால் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பின்னடைவு இல்லை. ஏனென்றால், இத்தகைய அறிவிப்புகள்தான் அரசியல் சாசன விதிகளை மேலும் பலப்படுத்துவதை உறுதி செய்கின்றன. ஜனநாயகத்துக்கு மேலும் பரிணாம வளர்ச்சியை சேர்க்கும் என்று கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை