பெங்களூரு,
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் வரும் 15 ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, கட்சி துவங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.
இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். டிடிவி தினகரனுடன் விவேக் ஜெயராமன் அவரது மனைவி மற்றும் தங்கை ஷகிலா ஆகியோர் சந்தித்தனர். மேலும், சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர்கள் மற்றும் சசிகலாவின் உதவியாளர் உள்ளிட்டோரும் சந்தித்தனர்.