இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வத்தை கிளர்ந்தெழச்செய்வதற்காக இம்பால் மேற்கு மாவட்ட நிர்வாகம் பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் வரும் 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 3 மெகா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு குலுக்கல் முறையில் கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கப்போவதாக அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பரிசாக கலர் டி.வி., செல்போன், போர்வைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசுளும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.