தேசிய செய்திகள்

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

டெல்லி,

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆணவ படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த கொலைகளை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணவ படுகொலைகளை தற்போதைய சட்டங்களால் உறுதியாக தடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவெ, தனிச்சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சுப்ரீம்  கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து