தேசிய செய்திகள்

தவெக பொதுக்கூட்டம்: மொட்டையடித்த பெண் தொண்டர்..!

விஜய்யின் பொதுக்கூட்டத்தால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்குள் மற்றும் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தொண்டர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பொதுக்கூட்டத்தால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று பெண் தொண்டர் ஒருவர் வேண்டிக்கொண்டு மொட்டையடித்துள்ளார். மேலும் விஜய் அண்ணா முதல்-அமைச்சராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும்தவெக பெண் தொண்டர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா