திருப்பதி,
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் ரெயிலில் தனியாக இருந்த பயணியிடம் 2 வாலிபர்கள் பிளேடை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வர், வாலிபர்களின் முயற்சியை தடுத்து, அவர்களை விரட்ட முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் பிளேடால் உமாமகேஸ்வரின் கையில் வெட்டினர். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை கண்ட ரெயில்வே போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் வெங்கடேஷ், விஜயன் என்பதும், இருவரும் ரெயிலில் தனியாக இருக்கும் பயணிகளிடம் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.