கண்ணூர்,
கேரள மாநிலத்தின் கண்ணூர்-வளபட்டணம் இடையே வழக்கம்போல் சென்றுகொண்டிருந்த மங்களூரு-சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். மாலை 7:10-7:30 மணிக்கு இடையே நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இரண்டு ரெயில்களின் சில ஏ.சி. பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ரெயில்வே போலீசார், நேற்று இரவே அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் அவர்களின் பங்கு உள்ளதா? என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.