தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் இன்று காலை லேசான நில அதிர்வு

ஜம்மு காஷ்மீர் ஹரியானாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

ஸ்ரீநர்,

கடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசனா நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது. இந்த அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்