தேசிய செய்திகள்

சோபியான் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோபியான் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள சாய்னாபோராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு