தேசிய செய்திகள்

இரு மாநில தேர்தல்; 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி. - 35.88%, பஞ்சாப் - 34.10%

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபைக்கான 1 மணி நிலவரப்படியான வாக்கு பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, 25,741 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதைப்போல், பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. அதன்படி, இத்தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி, 21.18 சதவீதமும், பஞ்சாப் - 17.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2 மாநிலங்களிலும் இதுவரை எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரு மாநிலங்களிலும் மக்கள் விறுவிறுப்புடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 34.10 சதவீதமும், பஞ்சாப்பில் 35.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு