புதுடெல்லி,
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மோதலில் அதிரடி திருப்பமாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அவர்கள் பணியாற்றி வந்த 10-வது மற்றும் 11-வது தளத்தில் அமைந்துள்ள அவர்களுடைய அறைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டனவா என்பது உறுதிபட தெரியவில்லை.
இந்தியாவின் உயரிய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐயில் நடக்கும் விவகாரங்கள் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்து வரும் நிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா இல்லத்தை சுற்றி சந்தேகத்திற்குரிய வகையில் 4 பேர் நடமாடினார்.
வீட்டு சுற்றுச்சுவரை சுற்றி பதுங்கிய படி நின்ற 4 பேரையும் அலோக்வர்மா வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பிடித்துச்சென்று போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் என்று கூறுபவர்கள் உளவுத்துறையை சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகளும் உலா வருகின்றன.