தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்து

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அதிருஷ்டவசமாக ராணுவ கமாண்டோக்கள் காயமின்றி தப்பினர்.

லே,

ஜம்மு காஷ்மீரின் லடாக் செக்டாரில் தரையிறங்க முயன்ற போது ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக இரண்டு ராணுவ கமாண்டர்கள் காயமின்றி தப்பினர். நவீன எளிய ரக ஹெலிகாப்டரான துருவ் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்கள் மற்றும் ராணுவ கமாண்டாக்கள் இருந்ததாவும் நால்வரும் எந்த காயமும் இன்றி தப்பியதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்