கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதல் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காமின் ஹசன்போரா பகுதியில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹசன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பயங்கரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்