தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இவருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரது செயல்பாடு விளையாட்டு துறைக்கு நம்பிக்கை பூஸ்டர் அளித்து உள்ளது. நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்று நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளார் என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்