மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை மாலை 6.40-மணிக்கு சிவாஜி பார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார்.
இந்த சூழலில், மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் இன்று காலை சந்தித்தனர். தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் மந்திரியாக பதவியேற்கும் முதல் நபர் உத்தவ் தாக்கரேதான் ஆவார்.