தேசிய செய்திகள்

உக்ரைன் போரால் விலைவாசி உயரும் - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் விலைவாசி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் போர் தாக்கம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி தொடுத்துள்ள போர், இந்த இரு நாடுகளையும் தாண்டி உலக நாடுகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்கு வழி வகுத்துள்ளது.

போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், அதன் தாக்கம் சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டிய பொருளாதார நிபுணர்களின் கருத்துகள் வருமாறு:-

பெட்ரோல், டீசல் விலை ஒரேயடியாக....

சுனில் குமார் சின்கா (ஆராய்ச்சி இயக்குனர், முதன்மை பொருளாதார நிபுணர், இந்தியா ரேட்டிங்ஸ்):-

இந்தியாவில் விலைகள் உயர்வதற்கு முக்கிய காரணமாக எரிபொருள் இருக்கும். அதன் தாக்கம், அரசின் பதிலளிப்பை பொறுத்து அமையும். வரிகளைக் குறைப்பதின் மூலம் பொதுமக்களுக்கு அரசு சலுகை வழங்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்த அனுமதித்தால், அது ஒரே நேரத்தில் பொதுமக்கள் தலையில் சுமத்துவதைவிட வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணெய் நிறுவனங்கள், சுமையின் ஒரு பகுதியை ஏற்றால், அதன் தாக்கம் வித்தியாசமாக இருக்கும்.

தற்போது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 டாலராக (சுமார் ரூ.9,000) உள்ளது.

எல்லா பொருட்களும் உயரும்

என்.ஆர்.பானுமதி, துணைவேந்தர், பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழகம்):-

விவசாய பொருட்கள் தவிர்த்து மற்ற எல்லாப்பொருட்களுமே பணவீக்க அழுத்தத்தைக் காணக்கூடும் என்று நான் கருதுகிறேன். கச்சா எண்ணெய் எங்கெல்லாம் மூலப்பொருளாக மாறுகிறதோ, அங்கு வெளிப்படையாக விலை உயர்வதை காண்பீர்கள். பணவீக்கம் என்னவாக இருந்தாலும், அந்த அளவுக்கு வளர்ச்சி பாதிப்பு இருக்கும். பணவீக்கம் 2 சதவீத புள்ளிகள் அதிகரிக்கப்போகிறது என்றால், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 2 சதவீத புள்ளிகள் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்களே, தயாராகுங்கள்

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவை வாரந்தோறும் கூர்மையான விலை உயர்வை கண்டுள்ளன. அலுமினியம், தாமிரம், உருக்கு போன்ற பிற பொருட்களின் விலைகள், உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கத்தொடங்கியதில் இருந்து கடுமையாகி உள்ளன.

உலக கச்சா எண்ணெய் வினியோகத்தில் 12 சதவீதத்தினை ரஷியா வைத்திருக்கிறது. அலுமினியம், தாமிரம், நிக்கல் போன்ற உலோகங்களின் முக்கிய வினியோகஸ்தராகவும் உள்ள நிலையில், உக்ரைனுடனான அதன் போர் உலகளவிலான விலைப்போக்குகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே பொதுமக்கள் விலைவாசி உயர்வை சந்திக்க தயாராகி விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

5 மாநில தேர்தலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை என்ற பார்வை, அரசியல்நோக்கர்கள் மத்தியில் உள்ளது. 7-ந் தேதி உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் முடிகிற தருணத்தில் அவற்றின் விலைகள் மறுபடியும் உயரத்தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது அப்படியே எல்லாவற்றிலும் எதிரொலிக்கும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு