தேசிய செய்திகள்

டெல்லி அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 3 உடல்கள் மீட்பு, மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

டெல்லி அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து, அருகாமையில் இருந்த குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில், இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம், திடீரென இடிந்து, அதன் அருகாமையில் இருந்த 4 குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்தது. இந்த பயங்கர விபத்தில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருபவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதனால், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை, 3- பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்