தேசிய செய்திகள்

நிழல் உலக தாதா ரவி பூஜாரி செனகலில் கைது இந்தியா அழைத்து வர அதிகாரிகள் குழு பயணம்

பல்வேறு குற்றவழக்குகளுக்காக தேடப்படும் நிழல் உலக தாதா ரவி பூஜாரியை கைது செய்து அழைத்து வர அதிகாரிகள் குழு ஒன்று ஆப்பிரிக்க நாடான செனகலுக்குப் புறப்பட்டுச் செல்கிறது.

புதுடெல்லி

நவி மும்பை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற கடத்தல் மன்னன் ரவி பூஜாரி சோட்டா ராஜனுடன் இணைந்து மும்பையில் 90களில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவரது கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் ரவி பூஜாரி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். செல்போன் தொடர்பு மூலம் இருப்பிடம் தெரிய வந்ததையடுத்து இந்தியாவின் கோரிக்கையால் கடந்த ஜனவரி 22ம் தேதி செனகலில் அவர் கைது செய்யப்பட்டார். இத்தகவல் 26ம் தேதி இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டரீதியாக ரவி பூஜாரியை நாடு கடத்தி அழைத்து வர காவல்துறை உயரதிகாரிகள் சிலர் செனகலுக்கு செல்ல உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு