தேசிய செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி இல்லை பாஜக கூட்டணியில் இருந்து விலக சந்திரபாபு நாயுடு முடிவு?

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக தெலுங்கு தேசம் விலக முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #ChandrababuNaidu #TDP

தினத்தந்தி

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் நேற்று 2018-2019-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டின் போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவிற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி தருவதாக மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.

கடந்த பல மாதங்களாக இந்த சிறப்பு நிதியை ஆந்திரா மாநில அரசு கேட்டு வருகிறது. அதுபோல புதிய திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திரா மாநில அரசுக்கு சிறப்பு நிதியும் மற்றும் புதிய திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் மிகவும் ஆவ \லோடு எதிர்பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை.

இது தெலுங்கு தேசம் எம்.பி.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் இதுபற்றி சந்திர பாபு நாயுடுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை அவசரமாக மூத்த அமைச்சர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

நாளை மறுநாள் தெலுங்கு தேசம் எம்.பி.க்களுடன் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 16 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய மந்திரி சபையில் 2 தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் பட்சத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்தும் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

#TDP #BJP #Budget2018 #ChandrababuNaidu #TDP

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது