ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சியில் தீவிரவாதிகள் சிலர் ஈடுபட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.