தேசிய செய்திகள்

பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எடியூரப்பா தகவல்

பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் முதல்கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிவடைந்து 42 கிலோ மீட்டர் நீள பாதையில் ரெயில்கள் இயங்கி வருகின்றன. சுமார் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

மத்திய அமைச்சரவை 2 முக்கியமான மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது 2-வது கட்ட (2ஏ, 2பி) மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெங்களூரு சில்க்போர்டு முதல் கே.ஆர்.புரம் வரையிலும், கே.ஆர்.புரத்தில் இருந்து தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையம் வரையிலும் 58 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டங்களின் மதிப்பீடு ரூ.14 ஆயிரத்து 788 கோடி ஆகும். இந்த திட்டங்கள் பெங்களூருவில் பொது போக்குவரத்து கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும். இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு