தேசிய செய்திகள்

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்; வேளாண் சட்டங்கள் ரத்து,மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமா..?

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள லோக்சபா குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 2021 இடம்பெற உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவின் மூலம், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களான,

1.விவசாயிகளின் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி) சட்டம், 2020

2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம், விவசாய சேவைகள் சட்டம், 2020,

3.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020.

ஆகிய இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள 26 மசோதாக்களுள் ஒன்றாக வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்தால் மட்டுமே தங்கள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து