தேசிய செய்திகள்

பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்: விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

புதுடெல்லி,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை 'பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்' என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்