புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை (புதன்கிழமை) வளைகுடா நாடான குவைத்துக்கு செல்கிறார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர் ஆராய்வார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை குவைத் ஆட்சியாளர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைப்பார். குவைத் வெளியுறவுத்துறை மந்திரி கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்த இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் அடங்கிய கூட்டு ஆணையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜெய்சங்கர் நாளை குவைத்துக்கு செல்கிறார்.