தேசிய செய்திகள்

“தன் இஷ்டம்போல் சபையை நடத்த மத்திய அரசு விரும்புகிறது” - காங்கிரஸ் கண்டனம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது நாட்டுக்கு நல்லதல்ல என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மக்களவை நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் கடமை. எங்கள் கடமையை நாங்கள் சரியாக செய்துள்ளோம். ஓ.பி.சி. மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம். ஆனால், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்பட எந்த பிரச்சினை குறித்தும் மத்திய அரசு விவாதிக்க தயாராக இல்லை.

ஆகஸ்டு 13-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென இன்று முடித்துக்கொள்ளப்பட்டது. தன் இஷ்டம்போல் சபையை நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இது நாட்டுக்கோ, ஜனநாயகத்துக்கோ நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு