புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை வீடுகள்தோறும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி திட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த ஏதுவாக ஒவ்வொரு வீட்டையும் தட்டவும் என்ற பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது.
இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, டெல்லியில் நேற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள், வளர்ச்சிக்குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வீடு வீடாக தடுப்பூசியை எடுத்துச்செல்வதற்கு, அரசுடன் இந்த அமைப்புகள் எந்தவகையில் பங்காற்ற முடியும் என்று விவாதித்தார். நாட்டில் 12 கோடி பேர் 2-வது டோஸ் தடுப்பூசியை போடாமல் இருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.