தேசிய செய்திகள்

“மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை” - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

தடுப்பூசி பற்றாக்குறையே இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி கொள்கை குறித்தும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வபோது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்றும் தடுப்பூசி போடுவது ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்த நிலைக்கு காரணம் என்று பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்