தேசிய செய்திகள்

கொல்கத்தா சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தா சென்றுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்களாத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக களமிறங்கி உள்ளது. அந்த வகையில் கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 11 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் அமித்ஷா கொல்கத்தா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திற்கு அமித்ஷா சென்றடைந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக அமித்ஷா கொல்கத்தா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை