தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

டெல்லி கைலாஷ் காலனியில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். மூத்த அமைச்சர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நிகம்போத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்