தேசிய செய்திகள்

பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- மத்திய சட்ட மந்திரி

தாமதிக்கப்படும் நீதியால் எந்த பலனும் இல்லை எனக்கூறிய மத்திய சட்ட மந்திரி, சரியான நேரத்தில் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை தான் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் தலைநகர் ராய்ப்பூரில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கான புதிய கட்டிடத்தை மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'சட்ட மந்திரியாக நான் பதவியேற்றபோது நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. அது தற்போது 5 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காணப்படுவது பிரச்சினை அல்ல, ஆனால் தீர்வு காண்பதை விட இரு மடங்கு அதிகமாக புதிய வழக்குகள் வருகின்றன. உதாரணத்துக்கு ஒரு ஐகோர்ட்டு நாளொன்றுக்கு 300 வழக்குகளுக்கு தீர்வு கண்டால், 600 புதிய வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன' என்று தெரிவித்தார். தாமதிக்கப்படும் நீதியால் எந்த பலனும் இல்லை எனக்கூறிய ரெஜிஜூ, சரியான நேரத்தில் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை தான் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். நீதிக்கும், பொதுமக்களுக்கும் இடையே தூரம் இருக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...